1. Home
  2. தமிழ்நாடு

மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் மாசு அளவு!!

மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் மாசு அளவு!!

டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மிக மோசமான நிலையை தொட்டுள்ளது.

டெல்லி பல்கலைகழக பகுதிகளில் காற்று தரக் குறியீடு 319 புள்ளியை தொட்டுள்ளது. அரசு காற்றுதர குறியீட்டை(AQI) 6 வகைகளாக தரம் பிரித்துள்ளது.

அதன்படி, 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது. 101 - 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 - 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல்நலனுக்கும் தீங்கு விளைவிக்கும்.

201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 300க்கு மேல் தாண்டினால் அது மிகவும் அபாயகரமானது. தற்போது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டியுள்ளதால் இவற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர காட்டி வருகிறது.


மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் மாசு அளவு!!

டெல்லியில் வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசுகளை வெடிக்கவோ, உற்பத்தி செய்யவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டெல்லியில் பட்டாசுகளை வாங்கி வெடித்தால் ரூ.200 அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

பட்டாசுகளை தயாரித்து விற்றால் ரூ.5,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவை அமல்படுத்தி கண்காணிக்க 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like