1. Home
  2. தமிழ்நாடு

கதறி அழுதும் விடவில்லை... ஐடி பெண் ஊழியருக்கு நடந்த கொடூரம்..!!

கதறி அழுதும் விடவில்லை... ஐடி பெண் ஊழியருக்கு நடந்த கொடூரம்..!!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.கொரோனாவின் காரணமாக வீட்டில் இருந்தபடியே அவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன் தினம் இப்பெண் தனது ஆண் நண்பருடன் மாலையில் பைக்கில் வெளியே சென்றுள்ளார். அப்போது இவர்களை பின்தொடர்ந்து பத்து பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளனர். நடுவழியில் இவர்களின் பைக்கை வழி மறித்து அந்த ஆண் நண்பரை அடித்து தாக்கியுள்ளனர். பின்பு அந்த இளம் பெண்ணை மறைவான இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். பத்து பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

10 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் மிகவும் சிரமப்பட்டு வீடு வந்து சேர்ந்திருக்கிறார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். அதன்பின்னர்,பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார்ளித்தனர். உள்ளூர் மருத்துவமனையில் பெண்ணுக்கு பரிசோதனை நடந்திருக்கிறது. போலீஸ் உயரதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like