1. Home
  2. தமிழ்நாடு

குளியலறையில் மருத்துவர் தம்பதி மர்ம மரணம்!!

குளியலறையில் மருத்துவர் தம்பதி மர்ம மரணம்!!

ஐதராபாத் நகரில் காதர்பாக் பகுதியில் வசித்து வந்த மருத்துவர் சையது நிசாருதீன் (26), உம்மி மொகிமீன் சைமா (22) ஆகிய இருவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சையது, சூரியாபேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் பணிபுரிந்து வந்தார்.

அவரது மனைவி மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். சமீபத்தில் சூரியாபேட்டை பகுதியில் இருந்து ஐதராபாத்துக்கு, இவர்கள் இடம் பெயர்ந்தனர்.

இந்நிலையில், தனது மகளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வராத சந்தேகத்தில் அவரது தந்தை, வீட்டுக்கு சென்றானர். அப்போது புதுமண தம்பதி குளியலறையில் இறந்தது கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.


குளியலறையில் மருத்துவர் தம்பதி மர்ம மரணம்!!

நேற்று முன்தினம் காலை சம்பவம் நடந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், மாலை வரை யாரும் கவனிக்கவில்லை. மனைவியை காப்பாற்ற சென்ற இடத்தில் கணவர் உயிரிழந்து இருக்க கூடும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சையது மின்சார தாக்குதல் ஏற்பட்ட தனது மனைவியை காப்பாற்ற சென்றிருக்க கூடும். அதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்க கூடும் என அவரது தந்தை கூறியுள்ளார். குளியலறையில் மின் இணைப்பு தவறுதலாக மாற்றி கொடுத்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

இருவரது உடல்களும் உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like