1. Home
  2. தமிழ்நாடு

இனி இப்படி தான் நிற்க வேண்டும் - முதல்வர் அதிரடி..!!

இனி இப்படி தான் நிற்க வேண்டும் - முதல்வர் அதிரடி..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் பாதுகாப்பிற்காக காவலர்கள் நிற்பது வழக்கம். அத்துடன், முதலமைச்சர் செல்லும் நேரத்தில் அவர் விரைவாக சென்று சேரும் வகையில், போக்குவரத்து சற்று நேரம் நிறுத்தப்படும்.

இந்த நிலையில், சாலைகளில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் நிற்பதை தவிர்ப்பதற்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து காவலர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பிற்காக 100 மீட்டருக்கு ஒரு காவலர் நிற்கவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 200 மீட்டருக்கு ஒரு காவலரை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய சந்திப்புகளில் மட்டும் போக்குவரத்தை விரைந்து சீர் செய்யவும், போராட்டங்கள் நடைபெறும் நாட்களில் வழக்கமான முறையில் பாதுகாப்புப் பணிகளில் காவலர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like