1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை பலி!!

அதிர்ச்சி! தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை பலி!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆவரம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் - மாரீஸ்வரி தம்பதி பசவேஸ்வரன், முத்துலட்சுமி என்ற இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். மணிகண்டன் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்தார். மூத்த மகன் பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில், ஒன்றரை வயது பெண் குழந்தை முத்துலட்சுமி தூங்கிக் கொண்டிருந்தது.

குழந்தை தூங்குவதாக எண்ணி தாய் மாடியில் காய வைத்திருந்த துணியை எடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது விழித்துக் கொண்ட குழந்தை தாயை காணாமல் தேடிய போது, அருகே இருந்து தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது.


அதிர்ச்சி! தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை பலி!!

துணியை எடுத்து விட்டு கீழே வந்த மாரீஸ்வரி, குழந்தையை காணவில்லை என தேடியுள்ளார். தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை அசைவின்றி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பதறியபடி குழந்தையை தூக்கி கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like