1. Home
  2. தமிழ்நாடு

இப்படி பேசினால் செருப்பால் அடிப்பேன்.. பிரபல நடிகர் ஆவேச பேச்சு..!

இப்படி பேசினால் செருப்பால் அடிப்பேன்.. பிரபல நடிகர் ஆவேச பேச்சு..!

பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு 'பி' டீமாக செயல்படுகிறேன் எனக் கூறுவதை ஏற்க முடியாது. இனி இதுபோல் பேசினால் செருப்பால் அடிப்பேன் என, பிரபல நடிகர் பவன் கல்யாண் கூறினார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் பவன் கல்யாண். இவர், 'ஆந்திர மாநில பாஜகவின் பி'டீமாக செயல்பட ஜனசேனா கட்சியை தொடங்கினார். பாஜகவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருகிறார்' என, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இப்படி பேசினால் செருப்பால் அடிப்பேன்.. பிரபல நடிகர் ஆவேச பேச்சு..!

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தன் கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே நடிகர் பவன் கல்யாண் பேசினார். அப்போது அவர், "நான் பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு 'பி' டீமாக செயல்படுகிறேன் எனக் கூறுவதை ஏற்க முடியாது. இனி இதுபோல் பேசினால் செருப்பால் அடிப்பேன்" எனக் கூறியபடி, தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி மேடையில் காட்டினார்.

மேலும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவசரமாக சந்தித்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டார். இதனால், ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like