1. Home
  2. தமிழ்நாடு

இந்த படம் பார்த்தால் ஹார்ட் அட்டாக்கே வரும்.. பிரபல இயக்குனர் ட்வீட்..!!

இந்த படம் பார்த்தால் ஹார்ட் அட்டாக்கே வரும்.. பிரபல இயக்குனர் ட்வீட்..!!

தமிழ், தெலுங்கு படங்களை போல் கன்னட சினிமா படங்களும் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள திரைப்படம்தான் 'காந்தாரா'. இந்த படத்தில் தமிழகத்தை சேர்ந்த கிஷோர், கதாநாயகியாக சப்தமி கவுடா ஆகியோர் நடித்துள்ளனர்.

பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சனையே இந்த படத்தின் கதைக்களம். நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தை இணைந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காந்தாரா படத்தின் கதையும், அது உருவாக்கப்பட்ட விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் குஷியடைந்த படக்குழுவினர் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியிட்டனர். இப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. கேஜிஎப் படத்தை தயாரித்த நிறுவனம் தான் இதையும் தயாரித்தது.

இந்த படம் பார்த்தால் ஹார்ட் அட்டாக்கே வரும்.. பிரபல இயக்குனர் ட்வீட்..!!

இந்நிலையில், காந்தாரா படம் குறித்து பேசிய இயக்குநர் ராம்கோபால் வர்மா, அதிக பட்ஜெட் படங்களை கலாய்த்து தள்ளியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " அதிக பட்ஜெட் படங்கள்தான் மக்களை தியேட்டருக்குள் இழுக்கும் என்ற மூட நம்பிக்கையை காந்தாரா மூலம் ரிஷப் ஷெட்டி உடைத்துவிட்டார்.


காந்தாரா நமக்கு மிகப்பெரிய பாடம். காந்தாரா படத்தின் வசூலால் 200 கோடி, 300 கோடி, 500 கோடி என மிகப்பெரிய பட்ஜெட்டில் படமெடுக்கும் இயக்குநர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகிறது. நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ரிஷப் ஷெட்டிக்கு சினிமா உலகத்தினர் ட்யூஷன் கட்டணம் செலுத்த வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.



Trending News

Latest News

You May Like