1. Home
  2. தமிழ்நாடு

பரபரப்பு! காவல் நிலையம் புகுந்து இளம்பெண் கடத்தல்!!

பரபரப்பு! காவல் நிலையம் புகுந்து இளம்பெண் கடத்தல்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் பிலாரா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், காணாமல்போன பெண் காவல்நிலையத்திற்கு வந்து, தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை என்று போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

மகள் காவல்நிலையம் வந்ததைத் தெரிந்து கொண்ட பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு வந்து இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.


பரபரப்பு! காவல் நிலையம் புகுந்து இளம்பெண் கடத்தல்!!


இதையடுத்து போலீஸார் மற்றும் இளம் பெண்ணின் கணவர் ஆகியோர் அந்த காரை 2 மணி நேரம் விடாமல் பின்தொடர்ந்து விரட்டி சென்றுபிடித்தனர். பின்னர் போலீஸார் இளம் பெண்ணை மீட்டு அவரது கணவரிடமே ஒப்படைத்தனர்.

பெண்ணை கடத்திய உறவினர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like