1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகைக்கு பதிலடி கொடுத்த வில்லன் நடிகர்!!

பிரபல நடிகைக்கு பதிலடி கொடுத்த வில்லன் நடிகர்!!

தனது முதல் படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை இந்துஜாவுக்கு, அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகத் தன்மை கொண்ட ஆர்.கே. சுரேஷ், ஸ்டுடியோ 9 என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் பில்லா பாண்டி என்ற திரைப்படம் கடந்த 2018 இல் வெளியானது.

இந்த படத்தில் சாந்தினி, இந்துஜா ரவிச்சந்திரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை இந்துஜா, தான் நடித்த படங்களிலேயே மிகவும் மோசமான படம் பில்லா பாண்டி என்று கூறியிருந்தார்.


பிரபல நடிகைக்கு பதிலடி கொடுத்த வில்லன் நடிகர்!!

அவரது இந்த பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்துஜாவின் பேச்சு குறித்து 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், ஆர்.கே. சுரேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பில்லா பாண்டியில் கதைக்களம் நன்றாக இருக்கும். நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ, அதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. ஏற்றிய ஏணியை எந்நாளும் மறக்கக்கூடாது என்று கூறினார்.

மேலும், சினிமா என்பது ஒரு பெரிய வட்டம். ராட்டினம் போல் சுற்றி கீழே வந்துவிடும். அதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ஆர்.கே. சுரேஷ் கடுமையாக பேசியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like