1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பிங்க..!! தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் வேலை..!!

உடனே விண்ணப்பிங்க..!! தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் வேலை..!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.

அந்த வகையில், தற்போது தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. கணினி வழியில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு வரும் விண்ணப்பிக்க நவம்பர் 11-ம் தேதி கடைசி நாள் என்றும் விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/, http://www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உடனே விண்ணப்பிங்க..!! தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் வேலை..!!

விண்ணப்பதாரர்கள் நவம்பர் 17 முதல் 19, 2022 வரை தங்கள் படிவங்களில் மாற்றங்களைச் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் ஆவணங்களைப் பதிவேற்ற/மீண்டும் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்படும் கடைசித் தேதி ஜனவரி 27, 2023 ஆகும். தேர்வு (கணினி அடிப்படையிலான தேர்வு) பிப்ரவரி 8, 2023 அன்று இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்படும். தாள் I காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மற்றும் தாள் II பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.

வயது வரம்பு:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனைய பிரிவினர் 01.07.2022 அன்று, 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மீன்வளத் தொழில்நுட்பம் மற்றும் வழிகாணும் பாடநெறியில் பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் (அ) விலங்கியியல் பாடங்களை முதன்மையாக கொண்ட அறிவியல் பாடநெறியால் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அ) மீன்வள அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


உடனே விண்ணப்பிங்க..!! தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் வேலை..!!

கட்டணம் :

பதிவுக் கட்டணம் : ரூ.150

தேர்வுக் கட்டணம் : ரூ 200

ஆதிதிராவிடர், அருந்ததியினர் பழங்குடியினர் ஆதரவற்ற விதவை மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணம் செலுத்த தேவையில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் 3 முறை கட்டம் செலுத்த தேவையில்லை. முன்னாள் ராணுவத்தினர் 2 முறை கட்டணம் செலுத்த தேவையில்லை.

Trending News

Latest News

You May Like