1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி செய்தி..!! இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும்..!!

அதிர்ச்சி செய்தி..!! இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும்..!!

நடப்பு நிதியாண்டில்(2022-2023) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னதாக நேற்று தெற்காசிய பொருளாதார அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உலக நாடுகளை விட இந்தியா வலுவாக மீண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஜூன் மாத கணிப்புகளை விட ஒரு சதவீதம் குறைந்து 6.5 சதவீதம் ஆக கணிக்கப்பட்டுள்ளது. நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிக நிதிச் செலவுகளால் தனியார் முதலீட்டு வளர்ச்சியானது குறைய வாய்ப்புள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் ஆக குறைந்தது இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் நிதியாண்டில் இந்தியாவிற்கான ஜிடிபி வளர்ச்சியினை உலக வங்கி திருத்தம் செய்வது இது மூன்றாவது முறையாகும்.

தெற்காசியாவுக்கான உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஹான்ஸ் டிம்மர் கூறுகையில்:- கொரோனா பெருந்தொற்றின் முதல் கட்டத்தின் போது, இந்தியா கடுமையான பொருளாதார நிலையிலிருந்து மீண்டது. உலகளாவிய அளவில் தேவை குறைந்து வருவது நாட்டின் ஏற்றுமதியை பாதிக்கும். முந்தைய ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக சேவைத் துறையிலும், சேவை ஏற்றுமதியிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் பாதி, இந்தியா உடபட பல நாடுகளில் பொருளாதாரம் பலவீனமாக உள்ளது. அதிக வருமானம் கொண்ட நாடுகளின் பொருளாதாரத்தில் வளர்ச்சி குறைவது இதற்கு காரணம்.

நிதிச் சந்தைகளை இறுக்கமாக்கும் உலகளாவிய பணவியல் கொள்கையும் முக்கிய காரணம். இது பல வளரும் நாடுகளில் மூலதன வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது, இதனால் வட்டி விகிதங்கள் உயரும் மற்றும் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் ஒரு சிறிய பகுதியால் மட்டுமே வளர்ச்சி உள்ளது. வளர்ச்சி மிகவும் பரந்த தளத்தில் இருந்து வர வேண்டும். பொருளாதாரத்தின் ஒரு சிறிய பகுதியின் வளர்ச்சி விகிதம் மூலம் அனைத்து குடும்பங்களிலும் வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருக்காது. மக்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தெற்காசியாவுக்கான உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஹான்ஸ் டிம்மர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like