1. Home
  2. தமிழ்நாடு

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..! கை பம்பு அமைத்து கள்ளச்சாராயம் விற்பனை..!!

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..! கை பம்பு அமைத்து கள்ளச்சாராயம் விற்பனை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டம் சஞ்சோடா, ரகோகர் ஆகிய கிராமங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இரண்டு கிராமங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..! கை பம்பு அமைத்து கள்ளச்சாராயம் விற்பனை..!!

அப்போது, அங்குள்ள காட்டுப் பகுதியில் அடிபம்பு ஒன்று இருந்ததைப் பார்த்த போலீசாருக்கு அதன் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பம்பை அடித்து பார்த்தபோது, தண்ணீருக்கு பதிலாக அதிலிருந்து மதுபானம் கொட்டியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து நிலத்தை தோண்டியபோது, சுமார் 7 அடி ஆழத்தில் பிளாஸ்டிக் பேரல்களை புதைத்து வைத்து அதில் மதுபானத்தை நிரப்பி வைத்திருந்ததும், தேவைப்படும்போது அடிபம்பு மூலம் சிறிய கேன்களில் பிடித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இந்த சோதனையின் போது, நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருந்த இரண்டு பிளாஸ்டிக் பேரல்களில் இருந்து 400 லிட்டர் உட்பட மொத்தம் 1,200 லிட்டர் சட்டவிரோத மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


Trending News

Latest News

You May Like