1. Home
  2. தமிழ்நாடு

உங்க ஆதாரில் இந்த தகவலை சேர்த்துட்டீங்களா..?

உங்க ஆதாரில் இந்த தகவலை சேர்த்துட்டீங்களா..?

த்து ஆண்டுகளுக்கு முன்னர் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை தற்போதைய விவரங்களை இணைக்காதவர்கள், தங்களின் அடையாள, இருப்பிடச் சான்றுகளை உரிய கட்டணம் செலுத்தி இணைத்து கொள்ளலாம்.

'மை ஆதார்' இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையங்கள் மூலமாகவோ இதை செய்துகொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புதிய விவரங்களை சேர்ப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்படவில்லை.

Trending News

Latest News

You May Like