1. Home
  2. தமிழ்நாடு

பெண் திடீர் உயிரிழப்பு.. ஆஸ்பத்திரியை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!

பெண் திடீர் உயிரிழப்பு.. ஆஸ்பத்திரியை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!

கடலூர் மாவட்டம் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மீனா (58). இவர், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறவே அதற்கு உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை மீனாவின் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார்.


இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) பிற்பகலில் மீனா உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம தெரிவித்துள்ளது. இதைக் கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், மருத்துவமனையின் தவறான சிகிச்சை முறையே மீனாவின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டினர்.

ஆனால், மீனாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் தான் உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர். இதை ஏற்க மறுத்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர்.


இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினரும் தனித் தனியாக புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like