மக்களே எச்சரிக்கை..!! கர்நாடகாவில் ஷூவில் ஒளிந்திருந்த நாகப்பாம்பு..!!
கர்நாடக மாநிலம் மைசூரில் ஒருவர் தனது ஷூவை வீட்டு வாசலில் கழற்றி விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் வந்து பார்த்தபோது, ஷூவுக்குள் ஏதோ ஒரு சத்தம் வந்துள்ளது. உடனடியாக அந்த நபர் ஷூவை உற்று நோக்கியபோது, ஷூவுக்குள் நாகப்பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதைப் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், பாம்பு பிடிப்பவரும் பாம்பை பிடிக்க முற்பட்டனர். அப்போது, அது ஷூவுக்குள்ளிருந்து வெளியே எகிறி வந்து படமெடுத்து ஆடியது.
இதனையடுத்து, பாம்பு பிடிப்பவர் அதை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்து கொண்டு சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்தனர், இது பயங்கரமான சம்பவம், காக்கும் பணியை சிறப்பாக செய்துள்ளீர்கள்.. என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.