1. Home
  2. தமிழ்நாடு

செல்போன் வாங்கித் தராததால் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

செல்போன் வாங்கித் தராததால் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி சரஸ்வதி (26). இருவருக்கும் 5 வயது ஒரு மகன் உள்ளார்.

சரஸ்வதி தன் கணவரிடம் தொடர்ந்து செல்போன் வாங்கி தரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். கணவர் செல்போன் வாங்கி தர மறுத்து தகாத வார்த்தையில் திட்டி விட்டு, வீட்டை விட்டு வெளியேறி சென்றார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது பெட் ரூம் உள்ளே தாழிட்டு இருந்தது. வேகமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த முருகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தார்.


செல்போன் வாங்கித் தராததால் மனைவி எடுத்த விபரீத முடிவு!!


அறையில் சரஸ்வதி மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like