1. Home
  2. தமிழ்நாடு

இந்து கோவிலில் சாமி சிலை சேதம்.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!!

இந்து கோவிலில் சாமி சிலை சேதம்.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!!

வங்கதேசத்தன் ஜெனைதா பகுதி தவுதியா கிராமத்தில் காளி கோவில் ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த கோவிலில் இருந்த சாமி சிலைகள் பல துண்டுகளாக உடைக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவு கோவிலின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தி, சற்று தொலைவில் வீசிவிட்டு சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்து, சிலைகள் ஆற்றில் கரைக்கப்படும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்து கோவிலில் சாமி சிலை சேதம்.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!!

வங்கதேசத்தில் இந்து கோவில் சேதப்படுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த மாதம், பாரிசாலில் உள்ள காஷிபூர் சர்பஜனின் துர்கா கோயிலில் உள்ள சிலைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்தனர்.

அதேபோல் கடந்த ஆகஸ்ட் 6 அன்று மோங்லா உபாசிலாவில் உள்ள கைன்மாரி கோவிலில், இந்து தெய்வ சிலைகளை சேதப்படுத்தியதாக மூன்று பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.


Trending News

Latest News

You May Like