1. Home
  2. தமிழ்நாடு

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!!

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!!

மகாராஷ்டிராவில் பெற்ற மகளை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மும்ப்ரா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, துணிச்சலாக போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தந்தை தன்னை பல முறை வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த போலீசார், தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவரது தந்தை, சிறுமியிடம் நீ பிறந்த போதே உனது தாய் இறந்து விட்டார் என கூறி அவரை மன வேதனைக்குள்ளாக்கி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.


பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!!


தேவைப்படும் போதெல்லாம் சிறுமியிடம் அதனை கூறி வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த சிறுமி, போலீசில் துணிச்சலாக புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார், சிறுமியின் தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு வாரத்திற்கு போலீசாரின் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like