1. Home
  2. தமிழ்நாடு

கடனை அடைக்க கார் திருட்டு.. கோவை இளைஞர் திண்டுக்கல்லில் கைது..!

கடனை அடைக்க கார் திருட்டு.. கோவை இளைஞர் திண்டுக்கல்லில் கைது..!

திண்டுக்கல் மாவட்டம், காக்காத்தோப்பு அருகே நீண்ட நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், காரை சோதனை செய்தனர். அப்போது, அதில் போதையில் ஒரு வாலிபர் இருந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

இதையடுத்து அவரை காவல் நிலையம் கூட்டிச் சென்று விசாரித்தனர். அப்போது, அந்த வாலிபர் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த விஜய் (22) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், கோவையில் பி.எஸ்.ஐ தகவல் தொடர்பியல் படிப்பை பாதியில் விட்டு, விட்டு லாரி ஓட்டுநராக இருந்தது தெரியவந்தது. அத்துடன் அவர் தீவிர மதுப்பழக்கத்திற்கும் ஆளாகியிருந்தார்.


அவர், வங்கியில் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீடு கட்டியிருந்தார். இதை அடைக்க முடியாமல் திணறிவந்தார். இந்நிலையில், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் கன்சல்டிங் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்றார். அங்கிருந்து மாருதி கார் ஒன்றைத் திருடி விற்று தன் கடனை அடைக்கலாம் என எடுத்து வந்துள்ளார்.

கொடைக்கானல் செல்லத் திட்டமிட்ட விஜய், பாதைமாறி வேடசந்தூர் வந்துள்ளார். அப்போது பெட்ரோல் இல்லாமல் கார் நடுவழியில் நின்றதால் அங்கேயே முடங்கிப்போனார். மது போதையில் இருந்ததால் காரிலேயே இருந்தார் விஜய். இந்நிலையில் தான் ரோந்து போலீசாரிடம் அவர் சிக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து விஜயை கைது செய்த போலீசார், அவர் திருடிவந்த காரையும் மீட்டனர்.

Trending News

Latest News

You May Like