1. Home
  2. தமிழ்நாடு

பேருந்தில் பெண்கள் காசு கொடுத்து செல்லலாமா? : அமைச்சர் விளக்கம்!!

பேருந்தில் பெண்கள் காசு கொடுத்து செல்லலாமா? : அமைச்சர் விளக்கம்!!

சமீபத்தில் திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை ஓசி என குறிப்பிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் பேச்சிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, தான் வழக்கு மொழியில் ஓசியென கூறியதை சிலர் தவறாக புரிந்துக்கொண்டதாக விளக்கமளித்தார். இதனிடையே மூதாட்டி ஒருவர், இலவசமாக பேருந்தில் பயணிக்க மாட்டேன் என்றும் டிக்கெட்டிற்கு பணம் கொடுத்து தான் பயணிப்பேன் என நடத்துநரிடம் அடம் பிடித்த வீடியோ வைரலானது.


பேருந்தில் பெண்கள் காசு கொடுத்து செல்லலாமா? : அமைச்சர் விளக்கம்!!


விசாரணையில் அவர் அதிமுகவினர் தூண்டதலில் பேரில் செய்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க, விருப்புவோர் பணம் கொடுத்து பயணிக்கலாம் என போக்குவரத்து துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது எனவும் வேண்டுமென்றால் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like