1. Home
  2. தமிழ்நாடு

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!!

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!!

2022ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் பங்களிக்கும் சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2022ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை 3 பேர் பெறுகின்றனர். அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!!


குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

அதில், அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!!

newstm.in

Trending News

Latest News

You May Like