1. Home
  2. தமிழ்நாடு

கருத்தரிப்பு மையங்களுக்கு 'செக்'.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

கருத்தரிப்பு மையங்களுக்கு 'செக்'.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தங்களை பதிவு செய்துகொள்ள கட்டணம் நிர்ணயித்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருதரிப்பு மையங்கள், வாடகைத் தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்தும் மையங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், வாடகைத் தாய் மையத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த பதிவு கட்டணத்தை இணையதளம் மூலமாகவும் செலுத்தலாம். இதன் மூலம், போலி கருதரிப்பு மையங்கள் செயல்படாமல் தடுக்க முடியும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like