1. Home
  2. தமிழ்நாடு

அனைவரும் தெரிந்து கொள்வோம்..!! ஆயுத பூஜை கொண்டாடுவதன் சிறப்பு இது தான்..!!

அனைவரும் தெரிந்து கொள்வோம்..!! ஆயுத பூஜை கொண்டாடுவதன் சிறப்பு இது தான்..!!

வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அவற்றையும் இறைவனாக வணங்குவதே ஆயுதபூஜை. ஆயுத பூஜையன்று சிறிய ஆணி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து எண்ணை இட்டு, பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் நாம் செய்யும் தொழிலுக்கு வருடத்தின் ஒரே நாள் கொடுக்கக்கூடிய மரியாதையாகும்.

இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுதபஜை கொண்டாடப்படுகிறது.

அனைவரும் தெரிந்து கொள்வோம்..!! ஆயுத பூஜை கொண்டாடுவதன் சிறப்பு இது தான்..!!

நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும், தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை, இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பூஜையின் முடிவில் சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்துச் சமைத்து நிவேதனம் செய்ய வேண்டும். மாலையில் கருப்பு கொண்டைக் கடலைச் சுண்டல் நிவேதனம் செய்வது சகல செல்வங்களையும் அளிக்கும். மனமுருகி அன்னை சரஸ்வதியை வழிபட்டு அறிவுச் செல்வத்தை பெருகச் செய்வோம்.

ஆயுத பூஜை தான், பாரதத்தின் உண்மையான தொழிலாளர் தினம்.

ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10.40 மணி முதல் 11.10 மணிவரை பிற்பகல் 12.10 மணிவரை 01.10 மணிவரை பூஜை செய்யலாம்.

Trending News

Latest News

You May Like