1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளை மதியம் வரை மட்டும் அனுமதி..!

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளை மதியம் வரை மட்டும் அனுமதி..!

பழநி மலைக் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை மதியம் 12 மணி வரை மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோவிலில் கடந்த 26-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா துவங்கியது. நாளை (அக்.4-ம் தேதி) உச்சிகால பூஜை மதியம் 12 மணிக்கும், சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கும் நடக்கிறது. காலை 11 மணிக்கு கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும்.


மதியம் 2:45 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட்டு மலைக்கோவில் சன்னதி திருக்காப்பிடப்படும். பீச் ரோடு, படிப் பாதை வழியாக மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்து வேலுடன் தங்க குதிரை வாகனத்தில் முத்துகுமாரசுவாமி எழுந்தருளி கோதைமங்களத்தில் அம்பு போடுதல் மகிசாசூரன் வதம் நடைபெறும். பின்னர், பராசக்தி வேலுக்கு அர்த்த சாம பூஜை நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like