1. Home
  2. விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் இந்திய அணி அறிவிப்பு!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் இந்திய அணி அறிவிப்பு!!

இந்தியாவில் சுற்றுபயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி தற்போது டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்குக்காக அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் இந்திய அணி அறிவிப்பு!!


அதன் படி ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி தென்னப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கவுள்ளது. இந்திய அணியின் துணை கேப்டனாக ஸ்ரேயஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி: ஷிகர் தவான் கேப்டன்) ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்) ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்) சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்) , ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய், முகேஷ் குமார் , அவேஷ் கான், முகமடது சிராஜ், தீபக் சாஹர்.

newstm.in

Trending News

Latest News

You May Like