அதிர்ச்சி! பாலியல் குற்றவாளிக்கு தண்டனையை குறைத்த உச்சநீதிமன்றம்!!
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வழங்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கின் விவரங்களை விசாரித்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை உத்தரப்பிரதேச காவல்துறை முறையாக நடத்தவில்லை என்றும் அரசு தரப்பு அளித்த சாட்சியங்கள் பல முரண்பாடாக இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, சிறுமியின் உடலை காவல்நிலையம் கொண்டுச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சாட்சிகளின் குறுக்குவிசாரணையின் போது அவை மறுக்கப்பட்டதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்திற்கு தாமதமாகத்தான் கிடைத்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த குழந்தையின் ஆடையில் இருந்த ரத்தம் குறித்து தடயவியல் அறிக்கை சரியான முறையில் இல்லை. எனவே வழக்கை சரிவர நடத்தவில்லை என்பதாலும், போதிய ஆதாரங்கள் இல்லாத்தாலும் மரண தண்டனையை இந்த அமர்வு ரத்து செய்கிறது.
பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கித் தருவதிலும் அரசு தோல்வியை அடைந்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
newstm.in