மக்கள் முன் விழுந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் – ஏன் தெரியுமா?
குஜராத்தில் பல கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி அங்கிருந்து பனஸ்கந்தா பகுதியில் உள்ள அம்பாஜி கோவிலில் தரிசனம் செய்தார். இரவு 10 மணிக்கு ராஜஸ்தானில் அபு சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களைச் சந்திக்க வந்திருந்தார் .
தாமதமாக வந்ததற்கு பிரதமர் மேடையில் மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். மேலும் 10 மணிக்கு மேல் விதிமுறைப்படி அதிக ஓசையை எழுப்பக் கூடாது என்று மைக் இன்றி மக்களிடம் உரையாடினார்.
மீண்டும் வந்து மக்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளார். பிரதமர் மோடி விதிமுறைகள் மற்றும் சட்டத்தின் படி நடந்துகொண்டு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். இதனை தொடர்ந்து நிறைவில் மேடையில் மக்களை நோக்கி மூன்று முறை தரையில் விழுந்து வணங்கியுள்ளார்.
பிரதமரின் இந்த செயலுக்கு கூட்டத்தில் மிக பெரிய அளவில் கரகோசம் எழுப்பபட்டது. பிரதமரின் குஜராத்தின் அம்பாஜி பகுதியில் 7200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அடிகள் நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் பங்கேற்று பிரதமர் மோடியை வரவேற்றனர்.
newstm.in