1. Home
  2. தமிழ்நாடு

மூத்த அரசியல் தலைவர் காலமானார்!!

மூத்த அரசியல் தலைவர் காலமானார்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கொடியேரி பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


மூத்த அரசியல் தலைவர் காலமானார்!!

அதன் காரணமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தான் பொறுப்பு வகித்த கேரள மாநில செயலாளர் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த கொடியேரி பாலகிருஷ்ணன் இன்று காலமானார்.

அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொடியேறி பாலகிருஷ்ணன், அச்சுதானந்தன் முதலமைச்சராக பதவி வகித்த போது, 2006 முதல் 2011 வரை உள்துறை அமைச்சராக இருந்தவர்.

newstm.in

Trending News

Latest News

You May Like