1. Home
  2. தமிழ்நாடு

பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்... 'நோ டைம் டு டை' படத்தில் பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!!

பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்... 'நோ டைம் டு டை' படத்தில் பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!!

'ஜேம்ஸ் பாண்ட்' என்ற கதாபாத்திரத்தை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் இயான் பிளெம்மிங் என்பவரால் 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு '007' என்ற குறியீடு வழங்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயான் பிளெம்மிங் 12 நாவல்களையும், 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதினார்.

இந்த கதாபாத்திரத்தை வைத்து முதன் முதலாக 1962-ம் ஆண்டு 'டாக்டர் நோ' என்ற படம் எடுக்கப்பட்டது. சீன் கானரி முதல் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார். அன்று முதல் கடைசியாக கடந்த 2021-ல் வெளியான 'நோ டைம் டு டை' படம் வரை, மொத்தம் 27 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த வரிசை திரைப்படங்களுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது5

பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்... 'நோ டைம் டு டை' படத்தில் பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!!

இந்த நிலையில் திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட் தோன்றி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, கடந்த ஆண்டு வெளியான 'நோ டைம் டு டை' படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆஸ்டன் மார்ட்டின் கார், ஜேம்ஸ் பாண்டின் உடை, கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.

பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்... 'நோ டைம் டு டை' படத்தில் பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!!

லண்டனில் ஏலம் விடப்படும் இந்த பொருட்களின் மூலம் இந்திய மதிப்பில் சுமார் 86 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தின் மூலம் திரட்டப்படும் நிதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like