1. Home
  2. தமிழ்நாடு

தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார்..!!

தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார்..!!

தேசிய மகளிா் ஆணையத்தின் முதல் தலைவராக இருந்தவருமான ஜெயந்தி பட்நாயக் நேற்று காலமானாா். அவருக்கு வயது 90.

ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ.பி.பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக் , கட்டாக் மற்றும் பொ்ஹாம்பூா் தொகுதிகளில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு 4 முறை தோ்வு செய்யப்பட்டார். தேசிய மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

வயது மூப்பு தொடா்பான பிரச்னைகளால் பாதிக்கபட்டிருந்த அவருக்கு கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி ஜெயந்தி பட்நாயக் காலமானார்.


தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார்..!!

ஒடிசா முதல்வராக மட்டுமின்றி, அசாம் மாநில முன்னாள் ஆளுநராகவும் இருந்துள்ள ஜெ.பி.பட்நாயக் கடந்த 2015-ம் ஆண்டு காலமானாா். இவா்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா்.

ஜெயந்தி பட்நாயக் மறைவுக்கு ஒடிசா ஆளுநா் கணேஷி லால் இரங்கல் தெரிவித்துள்ளாா். 'மூத்த அரசியல்வாதியும், குறிப்பிடத்தக்க எழுத்தாளருமான ஜெயந்தி பட்நாயக் மறைவு கவலையளிக்கிறது. இலக்கியத் துறைக்கு அவா் ஆற்றிய பங்கு என்றென்றும் நினைவில் கொள்ளப்படும்' என்று ஆளுநா் மாளிகை வெளியிட்ட இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பட்நாயக் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Trending News

Latest News

You May Like