1. Home
  2. தமிழ்நாடு

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் - உச்ச நீதிமன்றம்..!!

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் - உச்ச நீதிமன்றம்..!!

டெல்லியை சேர்ந்த திருமணமாகாத 25 வயது பெண், பரஸ்பர சம்மதத்தின் பேரில் பாலியல் உறவால் கர்ப்பம் அடைந்தார். இந்நிலையில், கர்ப்பத்தை கலைக்க, உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரிய வழக்கில், நீதிபதிகள் சந்திராசூட், சூர்யகாந்த் மற்றும் போபண்ணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதன்படி சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களும் தகுதி உடைவர்கள் எனவும் ,கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்துகொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியது என நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் - உச்ச நீதிமன்றம்..!!


கருக்கலைப்பு உரிமையைப் பொறுத்தவரை, அந்த வித்தியாசம் இல்லை. குழந்தை பெற்றுகொள்ளும் சுய உரிமைகள் திருமணமாகாத பெண்களுக்கு திருமணமான பெண்ணைப் போன்ற உரிமைகளை வழங்குகின்றன என தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like