1. Home
  2. தமிழ்நாடு

கருவை கலைக்க கணவன் அனுமதி தேவையில்லை.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

கருவை கலைக்க கணவன் அனுமதி தேவையில்லை.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு கணவனின் அனுமதி பெறத் தேவையில்லை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 21 வயது கர்ப்பிணி ஒருவர், மருத்துவ விதிகளின்படி கருக்கலைப்பு செய்ய அனுமதி கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்தப் பெண், சட்ட ரீதியாக விவாகரத்து பெறவில்லை; விதவையும் இல்லை.


இதனை விசாரித்த நீதிபதி அருண், "கருக்கலைப்பு செய்ய விரும்பும் கர்ப்பிணிகள், அதற்கு கணவனின் அனுமதியை பெறத் தேவையில்லை. கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தில் அதுபோன்ற விதிகள் ஏதும் கிடையாது. கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் வலி மற்றும் மன அழுத்தத்தை பொறுத்துக் கொள்வதே இதற்கு காரணம் ஆகும்.


வழக்கு தொடர்ந்த பெண் கணவருடன் உறவிலும் இல்லை. கணவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருடன் சேர்ந்து வாழவும் விரும்பவில்லை. இதன்மூலம், அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படுவதாக நீதிமன்றம் கருதுகிறது" எனத் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like