1. Home
  2. தமிழ்நாடு

அரசு தடை செய்யலை.. நான் நடிக்கிறேன்.. என்னை யாரும் கேட்க முடியாது..!

அரசு தடை செய்யலை.. நான் நடிக்கிறேன்.. என்னை யாரும் கேட்க முடியாது..!

"ஆன்லைன் சூதாட்டத்தை சுப்ரீம் கோர்ட்டும், அரசும் தான் தடை பண்ண வேண்டும். அப்படி தடை செய்த ஒன்றில் நான் நடிக்க மாட்டேன். ஆனால், அரசு தடை செய்யாத ஒன்றில் நடித்தால் யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது" என்று சரத்குமார் கூறினார்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

அரசு தடை செய்யலை.. நான் நடிக்கிறேன்.. என்னை யாரும் கேட்க முடியாது..!

அந்த வகையில், 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர் ஒருவர், 'ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். ஆனால், நீங்கள் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து வருகிறீர்களே…' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சரத்குமார், "மது, சிகரெட் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும். இதெல்லாம் உங்களால் தடை செய்ய முடியுமா..?. அதே மாதிரி, எதையெதை தடை செய்யணும்னு நான் முடிவு பண்ண முடியாது.


உச்சநீதிமன்றமும், அரசும் தான் அதை பண்ண முடியும். அப்படி தடை செய்த ஒன்றில் நான் நடிக்க மாட்டேன். ஆனால், அரசு தடை செய்யாத ஒன்றில் நடித்தால் யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது. முதலில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுங்கள்.

அதே போல, டாஸ்மாக் கடைகளால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அதை மூட வேண்டும் என்று சொல்லுங்கள், உங்களுக்கு ஆதரவாக நான் போராட தயாராக இருக்கிறேன். சினிமாவில், 'சிகரெட் பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு' என்று கீழேயே விழிப்புணர்வு வாசகம் வருகிறது.


அதனால எல்லாரும் சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திட்டீங்களா என்ன, இல்லையே. குடிப்பழக்கத்தால் தினமும் இரவு நேரத்தில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. அப்போ அதை முழுமையாக ஒழித்து விட வேண்டியதுதானே. ஏன் பண்ண முடியல..?. இது ரொம்ப பெரிய விவாதம், இன்னொரு நாள் நல்லா விரிவாகப் பேசுவோம்" என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like