1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களே, இன்று மதியம் ஹால் டிக்கெட்.. இணைப்பு உள்ளே இருக்கு..!

மாணவர்களே, இன்று மதியம் ஹால் டிக்கெட்.. இணைப்பு உள்ளே இருக்கு..!

8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று (செப். 29-ம் தேதி) மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


தேர்வின் போது ஹால் டிக்கெட் இல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. விரிவான தேர்வுகால அட்டவணை உட்பட கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like