வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!!
பைக்கில் அதிவேகமாக சென்று சாகசம் புரிந்து வழக்குப்பதிவுக்கு ஆளான யூடியூபர் டிடிஎஃப் வாசன், ஊடகங்களுக்கு வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து வேகமாக வாகனத்தை இயக்கி அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் டிடிஎப் வாசன் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து போத்தனூர் மற்றும் சூலூர் போலீசார் தலா 2 வழக்குகளை பதிவு செய்தனர்.
போத்தனூர் போலீசார் டிடிஎப் வாசனை தேடி வந்த நிலையில் மதுரைக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பாக அவர் சரணடைந்தார்.
இரண்டு நபர் உத்தரவாதம் அளித்த பின் மாலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். போத்தனூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் டிடிஎப் வாசன் ஜாமீன் பெற்ற நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், செய்தி ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை டிடிஎஃப் வாசன் வெளியிட்டுள்ளார். அதில், எனது பவர் தெரியாமல் நியூஸ் சேனல்ஸ் விளையாடிட்டு இருக்கிங்கனு கேட்க தோணுது... ஆனா, கேட்க மாட்டேன். சுமூகமா போயிடலாம்னுதான் நான் இருக்கேன். நியூஸ் சேனல்ஸ் பார்த்து பயம் கிடையாது, யாரை பார்த்தும் பயம் கிடையாது என்று பேசியுள்ளார்.
எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு. நீங்க எல்லையை கடந்து செல்கிறீர்கள்.. அதுக்கும் மேல போன, எல்லா யூ டியூபர்ஸும் சேர்ந்து உங்களை பத்தி பேச வேண்டி இருக்கும். எனவே, கட்டுப்பாடுடன் இருந்துகோங்க... இது மிரட்டலெல்லாம் கிடையாது' என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
newstm.in