1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகரின் தாயார் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்..!

பிரபல நடிகரின் தாயார் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்..!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி, ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 70.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும், சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் மகேஷ் பாபு. தெலுங்கில் அதிக அளவு ரசிகர் படை வைத்திருக்கும் நடிகர்களில் முன்னணியில் உள்ளார்.

பிரபல நடிகரின் தாயார் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்..!

நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மோசமடைந்த நிலையில் இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார்.

இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அவரது இறுதி ஊர்வலம் நாளை மறுநாள் மகா பிரஸ்தானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திரா தேவியின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like