1. Home
  2. தமிழ்நாடு

முக்கிய நட்பு நாடு பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கம்! ஜோ பைடன் அறிவிப்பு

முக்கிய நட்பு நாடு பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கம்! ஜோ பைடன் அறிவிப்பு

கடந்த 2012-ம் ஆண்டு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஒரு முக்கிய நேட்டோ அல்லாத (எம்என்என்ஏ) நட்பு நாடாக அறிவித்திருந்து. இதனால் இரு நாடுகளுக்கும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவைப் பேணுவதற்கான வழியை உருவாக்கியது. இந்த பதவி ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான உதவி மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் பல வசதிகள் மற்றும் சலுகைகளை வழங்கியது.

முக்கிய நட்பு நாடு பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கம்! ஜோ பைடன் அறிவிப்பு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடு பட்டியலில் இருந்து நீக்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

முக்கிய நட்பு நாடு பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கம்! ஜோ பைடன் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் வன்முறை காரணமாகவே அமெரிக்க அதிபர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like