1. Home
  2. தமிழ்நாடு

முதல் பெண் பிரதமராகிறார் ஜார்ஜியா மெலோனி!!

முதல் பெண் பிரதமராகிறார் ஜார்ஜியா மெலோனி!!

இத்தாலியில் கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமராக மரியோ டிராகி நியமிக்கப்பட்டர். எனினும், பொருளாதார நிலை மோசடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார்.

இதனைத் தொடர்ந்து இத்தாலியில் பொதுத்தேர்தல் நடத்த முடிவானது. அதன்படி 600 உறுப்பினர்கள் கொண்ட இத்தாலி நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் வாக்கு சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினர். இரவு 11 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதனை தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின.

முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி தலைவர் ஜார்ஜியா மெலோனியின் வலதுசாரி கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது.


முதல் பெண் பிரதமராகிறார் ஜார்ஜியா மெலோனி!!

இத்தாலி நாடாளுமன்றத்தின் பிரநிதிகள் சபை மற்றும் சேனன் சபைக்கு தேர்தலில் மெலோனியின் பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி சுமார் 27 விழுக்காடு வாக்குகளை பெற்று இருக்கிறது. அவரது வலதுசாரி கூட்டணி மொத்தம் 44 சதவீத ஆதரவை பெற்றது. 2 வது இடத்தை என்ட்ரிகோ லிட்டா தலைமையிலான இடதுசாரி கட்சி கூட்டணி பிடித்துள்ளது. பெரும்பான்மை இடத்தை பிடித்திருப்பதை அடுத்து ஜார்ஜியா மெலோனி இத்தாலியின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இத்தாலிய அரசியல் சட்டத்தின்படி நாட்டின் அதிபரை பிரதமரே தேர்வு செய்வார் என்பதால் முறையான அறிவிப்பு வெளியாக ஒரு சில நாட்களாகலாம் என்றும் கூறப்படுகிறது.



Trending News

Latest News

You May Like