1. Home
  2. தமிழ்நாடு

கணவன் கண்முன் மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை!!

கணவன் கண்முன் மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை!!

கணவர் கண்முன் இளம்பெண்ணை ஆறு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் சத்பாவ்ரா என்ற பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம் பெண்ணுக்கு சம்பவ தினத்தன்று கணவர் வீட்டாருடன் சண்டை ஏற்பட்டது. கோபத்தில் அந்த பெண் பக்கத்து மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு கிளம்பி சென்றார்.

மனைவியை காணவில்லை என்பதால் இளம் பெண்ணின் கணவரும் அவரது உறவினரும் இரவு எட்டு மணி அளவில் வண்டி எடுத்துக்கொண்டு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் தேடிச் சென்றனர்.

அப்பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் கணவரும் அவரது உறவினரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்திற்கு ஆறு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து, கணவர் மற்றும் அவரது உறவினரை கடுமையாக தாக்கினர்.


கணவன் கண்முன் மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை!!


கணவர் நிலைகுலைந்து விழுந்த நிலையில், பெண்ணை அருகேயுள்ள இடத்திற்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பெண்ணை வேறு இடத்திற்கு கடத்தி செல்ல முயற்சித்த போது பைக்கின் மீது நான்கு சக்கர வாகனம் ஒன்று மோதியது.

காப்பாற்றுமாறு அப்பெண் கூச்சலிடத் தொடங்கிய நிலையில், அருகேயுள்ள கிராமத்தினர் பெண்ணை மீட்டு, இரு குற்றவாளிகளை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய நான்கு பேரை காவல்துறை தேடி வருகிறது.

குற்றச் செயலில் ஈடுபட்டவர்களில் இருவர் தனக்கு அறிமுகமானவர் என பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like