1. Home
  2. தமிழ்நாடு

சிறுகோள் மீது விண்கலத்தை மோதச் செய்து நாசா அசத்தல்!!

சிறுகோள் மீது விண்கலத்தை மோதச் செய்து நாசா அசத்தல்!!

பூமியை தாக்க வாப்புள்ள சிறுகோள் மீது விண்கலத்தை வெற்றிகரமாக மோதச்செய்து விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சாதனை படைத்துள்ளது.

சூரிய மண்டலத்தில் உள்ள பூமியை சுற்றி லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில், கிரக பாதுகாப்புக்கான தற்போதைய பணியை நிர்வகிக்க நாசா, கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்றை நிறுவி உள்ளது. இந்த அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது.


சிறுகோள் மீது விண்கலத்தை மோதச் செய்து நாசா அசத்தல்!!


அந்த விண்கலம் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்ட டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோளை கண்டுபிடித்தது. இந்த டிடிமோஸ் பைனரி சிறுகோளை பூமி மீது மோதுவதை தடுத்து அதை திசைதிருப்ப நாசா சோதனை அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டது.

அந்த வகையில் நாசாவால் ஏவப்பட்ட அந்த விண்கலம் பூமி மீது மோத வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட சிறுகோள் மீது வெற்றிகரமாக மோதியது. இதன் மூலம் அந்த சிறுகோளின் பாதை பூமியில் இருந்து திசை திருப்பப்பட்டுள்ளது.


சிறுகோள் மீது விண்கலம் மோதும் வீடியோவை நாசா தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பியது. விண்கலம் வெற்றிகரமாக சிறுகோள் மீது மோதிய நிலையில் அந்த கோளின் பயண திசை விரைவில் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like