புதுச்சேரியில் தமிழக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று முழு அடைப்பு போராட்டம்..!!
நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா , நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயங்கவில்லை. ஒரு சில புதுச்சேரி அரசு மற்றும் தமிழக அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது.
பந்த் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த இரண்டு தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.