1. Home
  2. வர்த்தகம்

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன தெரியுமா..?

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன தெரியுமா..?

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 328 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து, 4610 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல், ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து, 36,880 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.


அதேபோல், சென்னையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5012 ரூபாய் எனவும், ஒரு சவரன் 40,096 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 60.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 60,700 எனவும் விற்பனையாகி வருகிறது.

Trending News

Latest News

You May Like