மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற கட்டட தொழிலாளியின் மகள்!!

செங்கல்பட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளியான மனோகருக்கு ரக்ஷயா என்ற மகள் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்திருக்கும் அவருக்கு சிறுவயதில் இருந்தே அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் பெற வேண்டும் என்பது லட்சியம்.
Also Read - டெல்லி முதல்வர் ஆகிறார் ரேகா குப்தா..!
பெற்றோர் கொடுத்த ஊக்கம் காரணமாக பகுதி நேர வேலை செய்தும் படித்தும் இதற்காக அவர் தன்னை தயார்ப்படுத்தி வந்துள்ளார். அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
வெற்றியை கெளரவிக்கும் வகையில் அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்றனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 'Forever Star India Awards' நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகினார்.

பின்னர் மாநில அளவிலான நடந்த அழகிபோட்டியானது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ரக்ஷயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வின்னர், ரன்னர் என்று சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கும் தேர்வாகியுள்ளனர்.
வருகிற டிசம்பர் மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வாகிய வின்னர், ரன்னர் என அனைவரும் ஸ்டேஜ் ஷோ செய்ய உள்ளனர். இதில் தேர்வாகும் நபர் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல உள்ளனர். நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று ரக்சயா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
newstm.in