அதிர்ச்சி! பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் கடந்த வாரம் செய்தி பரவியது.
இதை அடுத்து உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமை தனிப்படை அமைத்து அப்பகுதி முழுவதும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பொறியியல் பட்டதாரிகள் உட்பட 9 பேர் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
இதில் முக்கிய குற்றவாளியான ரமேஷ் என்பவரை ஏற்கனவே உளுந்தூர்பேட்டை உதவி ஆய்வாளர் கைது செய்து பணம் பெற்றுக் கொண்டு விடுவித்துள்ளார். இதனை அறிந்த அதிகாரிகள் அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தனர்.
தற்போது அந்த முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in