நாளை முதல் இவர்களுக்கு கலந்தாய்வு.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் மாவட்டத்திற்குள் மாறுதல் பெற நாளை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஜூன் மாதம் 1-ம் தேதி நிலவரப்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
Also Read - டெல்லி முதல்வர் ஆகிறார் ரேகா குப்தா..!
அதன்படி, நிதிக் காப்பாளர், மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் மாவட்டத்திற்குள் மாறுதல் பெற நாளையும் (27-ம் தேதி), நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், மாவட்டம் விட்டு மாவட்டம் விருப்ப மாறுதல் பெற நாளை மறுநாளும் (28-ம் தேதி) கலந்தாய்வு நடத்தப்படும்.
பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வரும் 29-ம் தேதி நடக்கும். அன்றைய தினமே உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோர் மாவட்டத்திற்குள் மாறுதல் பெறலாம். ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும், பிற அலுவலகங்களுக்கு மாறுதலும் வழங்கப்பட வேண்டும். பிற பணியாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்' என்று கூறப்பட்டுள்ளது.