"யாரும் டவுன்லோட் பண்ணாதீங்க..." – கதறி அழும் சீரியல் நடிகை!!
லோன் ஆப் மூலம் ஏமாற்றப்பட்டதாக பிரபல தமிழ் சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன் கதறி அழுது வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தான் லோன் ஆப் மூலம் ஏமாற்றப்பட்டதாகவும், தனது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு 5 லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது. அதை கிளிக் செய்தவுடன் அந்த ஆப் டவுன்லோட் ஆகிவிட்டது. 4 நாட்களுக்கு பிறகு அவர் ரூ.5000 லோன் வாங்கியதாக ஒரு எஸ்எம்எஸ் வந்தது.
அதை அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததால், பல மெசேஜ்கள், போன் கால்கள் வந்துள்ளன. மேலும் அவரை ஆபாசமாக பேசி வாய்ஸ் மெசேஜும் வந்தது. 5,000 ரூபாய் காட்டவில்லை என்றால், புகைப்படங்களை வைரல் செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதனால் அவர் ஐதராபாத் சைபர் க்ரைமில் புகார் அளித்தார். இதனிடையே அவருடன் தொடர்பில் உள்ள உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர் என அனைவருக்கும் நடிகையை குறித்த ஆபாச புகைப்படங்கள் வேறு ஒரு எண்ணில் இருந்து அனுப்பட்டது.
அதன்பிறகே எனது மொபைல் ஹாக் செய்யப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இது போன்ற தப்பான ஒரு லிங்கை கிளிக் செய்ததால் இதுபோன்ற நிலை வந்துள்ளதாகவும், அதனால் யாரும் புது எண்ணில் இருந்து பரிசு விழுந்துள்ளது என்று வந்தால், லிங்கை தயவு செய்து கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இதே போன்று லோன் ஆப் மூலம் ஏமாற்றப்பட்ட ஒரு சிலர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in