போண்டா மணிக்கு பணம் கொடுத்து உதவிய தனுஷ்!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் போண்டாமணி, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது இரண்டு சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு உதவும்படி போண்டாமணியின் நண்பரும் நடிகருமான பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டது. இந்த நிலையில் போண்டாமணியின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நடிகர் தனுஷ், போண்டாமணிக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். இந்த நிதி தனக்கு கிடைத்ததாகவும், உதவி செய்ததற்கு நன்றியும் கூறி வீடியோ வாயிலாக தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி போண்டா மணிக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் தனுஷூம் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
newstm.in