மோரில் தூக்கமாத்திரை கலந்து கணவனைக் கொன்ற மனைவி!!

ஆந்திர மாநிலம் பாலாந்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கோலா சுப்பாராவ் என்பவருக்கு வெங்கட லட்சுமி என்ற பெண்ணுடன் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில் இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு வந்தது.
மேலும் வெங்கட லட்சுமிக்கு வேறொருவருடன் நட்புறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நட்புறவு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது பழக்கம் கணவரின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.
Also Read - டெல்லி முதல்வர் ஆகிறார் ரேகா குப்தா..!
இதனால் தனது கணவருக்கும் தெரியவந்துவிடுமோ என்ற பயத்தில் வெங்கட லட்சுமி இருந்துள்ளார். இந்த பயத்தில் தனது கணவர் கோலா சுப்பாராவை கொல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த ஜூன் மாதம் ஒரு நாள் இரவு தனது கணவருக்கு கொடுக்கப்பட்ட மோரில் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.

காலை கணவரை எழுப்பும்போது அவர் எழவில்லை என்பதால் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக கூறி தனது உறவினர்களிடம் கதறி அழுது நாடகமாடியுள்ளார். இதயடுத்து கணவர் சுப்பாராவுக்கு இறுதிசடங்கு நடத்தி முடிக்கப்பட்டது.
கணவர் இறந்தபின்பு மனைவி வெங்கட லட்சுமி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கிறார். மேலும் சீனிவாஸ் என்பவருடன் இன்னும் நெருக்கமாக இருந்து வந்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த சுப்பாராவின் குடும்பத்தார் சுமார் 3 மாதங்களுக்கு பிறகு காவல்நிலையத்தில் சுப்பாராவ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தனர்.
விசாரணையில் லட்சுமியின் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தது. இதனால் காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது கணவனை கொலை செய்ததாக வெங்கட லட்சுமி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெவ்ஸ்டம்.in