1. Home
  2. தமிழ்நாடு

பெரும் சோகம்.. மருத்துவமனையில் தீ.. தந்தை, மகன், மகள் பலி..!

பெரும் சோகம்.. மருத்துவமனையில் தீ.. தந்தை, மகன், மகள் பலி..!

ஆந்திராவில், புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தந்தை, மகன், மகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டாவில் மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி என்பவர் கார்த்திகேயா மருத்துவமனை என்ற மருத்துவமனையை கட்டியுள்ளார். மூன்று மாடி கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் மருத்துவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த மருத்துமனையில் இன்று எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பெரும் சோகம்.. மருத்துவமனையில் தீ.. தந்தை, மகன், மகள் பலி..!

அதிகாலை 4 மணி அளவில் இந்த தீவிபத்து ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை வளாகம், மாடியில் இருந்த மருத்துவர் வீட்டில் அனைவரும் நன்றாக உறங்கியுள்ளனர். அப்போது, தீ மளமளவென பரவியதில் மருத்துவரின் 6 வயது மகள் கார்த்திகா, 12 வயது மகன் பரத் ரெட்டி ஆகியோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக மரணம் அடைந்துள்ளனர்.

தீவிர காயங்களுடன் மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி மற்றும் மனைவி அனந்த லட்சுமி மீட்கப்பட்டனர். இந்த நிலையில் 50 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்ட மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மருத்துவமனையில்உள்ள அனைத்து அறைகளிலும் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அறைகளில் புகைமூட்டம் நிலவியதால் தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் ஆகியோர் உள்ளே சென்று பார்ப்பதில் தாமதம் ஏற்பட்டறது. தீ விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் ஆகியோர் மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like