1. Home
  2. தமிழ்நாடு

குண்டு தாக்குதல் தொடர்ந்தால்.. அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!

குண்டு தாக்குதல் தொடர்ந்தால்.. அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!

மிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது. பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்ந்து நீடித்தால், தொண்டர்களின் கோபத்துக்கு மாநில அரசு ஆளாக நேரிடும்.

கோவையில் நாளை பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும். சட்டம் - ஒழுங்கு சீர்குலைய கோவை மாநகர காவல்துறையே காரணம். காவல்துறை நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும். கோவை காவல்துறை அதிகாரிகள் மீது நான் புகார் கொடுக்க உள்ளேன்.


பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். வன்முறையை பாஜக விரும்பவில்லை. முதல்வர் விழித்துக்கொள்ள வேண்டும். பாஜக - திமுக இடையே நடைபெறும் போரில் காவல்துறை வரக்கூடாது.

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான பாதிப்புகளை ஆய்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், சரஸ்வதி தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like

News Hub